search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை சுகாதார நிலையம்"

    • புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான புதுப்பட்டிணம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இங்கு புதுப்பட்டிணம், கண்கொள்ளான்பட்டிணம், தோப்பு முள்ளி முனை, காரங்காடு ஆகிய கடலோர கிராமங்களைச் சேர்ந்த வர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

    தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ள தால் செவிலியர்கள் அங்கு தங்கி பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி கடலோர மீன வர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மேலும் கட்டிடம் பழுது காரணமாக செவிலியர்கள் இங்கு தங்க முடியாத காரணத்தால் அவசர சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக இரவு நேரங்க ளில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வயதான வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்த துணை சுகாதார நிலையத்திற்கு பதிலாக புதிதாக துணை சுகாதார நிலையம் கட்ட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    நெய்யூர் அருகே மேக்கோடு பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், காணிமடம் பகுதியில் ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா மேக்கோடு துணை சுகாதார நிலையத்தில் இன்று நடந்தது.

    விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக குமரி மாவட்டம் வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியனை கலெக்டர் அரவிந்த் வரவேற்றார். நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் தி.மு.க.வினர் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பெர்னாடு, ராஜன், ஒன்றிய செயலாளர் மதியழகன், மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என் சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் அமைச்சர் மா.சுப்பிர மணியனை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்.

    • குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
    • கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.

    செட்டிபாளையம் :

    கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். கோவை மதுக்கரையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ஏ.சி.சி. டிரஸ்ட் சார்பில் மதுக்கரை அடுத்த குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில், மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை பார்வையிட்ட அமைச்சர், வரும் முன் காப்போம், மக்களை தேடி மருத்துவத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை இயக்குநர் அருணா, பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஏசிசி நிர்வாக இயக்குநர் எஸ்ஆர்.டிரிக்கி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.இதில் அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்க ளை வழங்குகிறார். இதில் டீன் ரவீந்திரன், கண்கா ணிப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர்

    பங்கேற்கின்றனர்.

    ×